இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று (08) வெள்ளிக்கிழமை காலை திறந்துவைத்தார்.
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் 'ஈ விஸ்" என்ற பெயரில் இந்த கணனி உற்பத்தித் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இத் திறப்பு விழா வைபவத்தில் அமைச்சர்களான பந்துல குணவர்தன- ராஜித சேனாரத்ன- லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன - ரஞ்சித் சியம்பலாப் பிடிய- மஹிந்த அமரவீர- மத்திய மாகாண அமைச்சர் சரத் ஏக்கநாயக்க- ஊவா மாகாண முதலமைச்சர் ஷசீந்திர ராஜபக்ஷ - மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ- சஜித்வாஸ் குணரத்ன- 'ஈ விஸ்" நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்ரமநாயக்க ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment