Wednesday, November 6, 2013

தெற்கு அதிவேகப் பாதையை மேலும் விஸ்தரிக்க ஜனாதிபதி உத்தரவு!

தெற்கு அதிவேகப் பாதையை மேலும் விஸ்தரிக்க ஜனாதிபதி
உத்தரவு!





பொது மக்கள் பயனடையும் வகையில் தெற்கு அதிவேகப்
பாதையை மேலும் விஸ்தரிக்குமாறு ஜனாதிபதி
சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று (05) தெற்கு
அதிவேகப் பாதையை நேரில் சென்று பார்வையிட்டதோடு
அப்பாதையை காலி பின்னதுவையில் இருந்து மாத்தறை
கொடகம வரையில் விஸ்தரிக்க உரிய நடவடிக்கைகள்
மேற்கொள்ளுமாறு உரிய அதிகாரிகளைப் பணித்தார்.

அங்கு திரண்டிருந்த பொது மக்களுடன் சினேகபூர்வமாக
ஜனாதிபதி உரையாடினார். அவர்களின் குறைகளையும்
கேட்டறிந்தார்.

அமைச்சர்களான நிர்மல கொத்தலாவல- டளஸ்
அழகப்பெரும-பியசேன கமகே- தென் மாகாண ஆளுநர் குமார்
பாலசூரிய- தென் மாகாண சபை முதலமைச்சர் சான்
விஜயலால் த சில்வா உட்பட முக்கியஸ்தர்கள் இந்த
நிகழ்வில் கலந்துகொண்டனர். ஆக்ஷ

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment