Sunday, November 17, 2013

இலங்கை மக்களை பிளவுபடுத்தாதீர்!

இலங்கை மக்களை பிளவுபடுத்தாதீர்!

-சர்வதேச ஊடகங்களிடம் ஜனாதிபதி கோரிக்கை-



இலங்கையில் இன நல்லிணக்கம் ஏற்பவதற்கு  ஒத்துழைப்பு வழங்குமாறும் மக்கள் மத்தியில் பிளவுகளை ஏற்பத்தும் முயற்சிகளில் ஈடுபடவேண்டாம் என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்தார். 

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டின் இறுதி நாளான இன்று (17) பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். இங்கு ஜனாதிதி ​தொடர்ந்தும் உரையாற்றுகையில்-


இலங்கையில் உள்ள சகல இன மக்களும் எனது நாட்டின் பிரஜைகளே. அவர்கள் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு இந்த நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் எனக்குரியது. அதனை நான் உரிய முறையில் நிறைவேற்றுவேன்.

ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் அகியவற்றுக்கு பொதுநலவாயம் மிகவும் மதிப்பளிக்கின்றனது. அதேபோன்று எமது நாட்டின் அரசியலமைப்பையும் சட்டங்களையும் நாம் மதிக்கிறோம்.

எமது நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணும் முயற்சிகளை நாம் முன்னெடுத்துள்ளோம். அதற்காகவே பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. 30 வருடங்கள் நீடித்த பாரிய பிரச்சினைகளுக்கு ஒரே இரவில் தீர்வை எதிர்பாரக்க முடியாது. அதற்கு கால அவகாசம் தேவை.

ஒரு சிலரையல்ல - அனைவரையும் திருப்திப்படுத்தும் தீர்வையே நான் விரும்புகிறேன். இதற்காக தென் ஆபிரிக்காவின் அனுபவங்களை கவனத்தில் கொண்டுள்ளோம்.

ஜனநாயத்தை மதிக்கும் நாம் நாடு முழுவதிலும் உரிய காலத்தில் தேர்தல்களை நடத்திவருகிறோம். வட மாகாணத் தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் வெற்றி வெற்றிபெற்றுள்ளது.


வட மாகாணத்தில் முஸ்லிம்களும் சிங்களவர்களும் சிறுபான்மையாக உள்ளனர். அவர்களைப் பாதுகாப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி கூறுனார்.

இந்த ஊடகவியலளார் சந்திப்பில் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா, கயானா ஜனதிபதி டொனால்ட் ரவீந்திரநாத் ரமோட்டார், மலேசியப் பிரதமர் டத்தோ முகம்மது நஜீப் அப்துல் ரஸாக், தென்னாபிரிக்க ஜனாதிபதி கெனப் சுமா ஆகியோர் உட்பட மற்றும் பலர் கலந்துகொண்டனர். 

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment