Sunday, November 3, 2013

37 நாடுகள் வரவை உறுதிப்படுத்தியுள்ளன!


37 நாடுகள் வரவை உறுதிப்படுத்தியுள்ளன!

-அமைச்சர் கெஹெலிய தகவல்-


அடுத்த மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதை இன்றுவரையில் 37 நாடடுகள் உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (31) பிற்பகல் அவரது அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அமைச்சர் மேலும் தகவல் தெரிவிக்கையில்:

இன்னும் சில தினங்களில் ஏனைய நாடுகளும் மாநாட்டில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்தும் என எதிர்பார்க்கிறோம். இதற்கு முன்னர் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொண்ட உறுப்பினர்களை விட கூடுதலான உறுப்பினர்கள் கலந்துகொள்வர் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள முக்கிய ஹோட்டல்கள் அனைத்தும் மாநட்டுக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

மாநாட்டில் கலந்துகொள்பவர்களுக்கான வீஸா உரிய காலத்தில் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. செனல் 4 உட்பட உலகின் சகல ஊடகவியலாளர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

இந்த மாநாட்டுக்காக பெருந்தொகை நிதியை அரசாங்கம் செலவிடுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இந்தச் செலவினங்கள் எல்லாம் எமது நாட்டின் முன்னேற்றத்துக்கான முதலீடாகும்.

கொழும்பு நகரை அழகுபடுத்துவது மாநாட்டுக்கு வரும் தலைவர்களைக் கவர்வதற்காக அல்ல. யுத்தம் முடிந்த பின்னர் அபிவிருத்திப்பணிகள் அரம்பித்ததிலிருந்து சகல நகரங்களையும் அரசாங்கம் அழகுபடுத்திக்கொண்டுதான் இருக்கின்றது.

மாநாடு நெருங்கிவரும் நேரத்தில் ஐ.தே.கட்சி கொழும்பில் பெரும் ஆர்ப்பாட்டம் ​ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிகிறோம். எனினும் அதனை அரசாங்கம் தடை செய்யாது. அதனை மக்கள் கவனித்துக்கொள்வார்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

-எம்.ஜே.எம். தாஜுதீன்-

No comments:

Post a Comment