தந்தைக்கு மலரஞ்சலி!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந்தையும் மறைந்த முன்னாள் பிரதி சபாநாயகரும் அமைச்சருமான டி.ஏ. ராஜபக்ஷவின் 46 ஆவது ஞாபகார்த்த தின நிகழ்வு இன்று (6) ஜனாதிபதி தலைமையில் தங்காலையில் நடைபெற்றது.
தங்காலையில் வைக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் உருவச்சிலைக்கு ஜனாதிபதி- அவரது பாரியார் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ- சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- பாராளுமன்ற உறுப்பினர்கள்- அரசியல் பிரதிநிதிகள்- மாணவர்கள் உட்பட பலர் மலர் அஞ்சலி செலுத்தினர்.
46 ஆவது நினைவு தினத்தையொட்டி டி.ஏ. ராஜபக்ஷ மன்றத்தில் தங்கல்ல நகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட நிகழ்வில் டி.ஏ. ராஜபக்ஷ பற்றி விசேட சொற்பொழிவாற்றப்பட்டது.
மேலும் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு ஜனாதிபதி தமது தந்தையின் நினைவாக புலமைபரிசில்களை வழங்கினார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ- சபாநாயகர் சமல் ராஜபக்ஷ- அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஆகியோரின் தந்தையான டி.ஏ.ராஜபக்ஷ- ஹம்பந்தோட்ட பெலியத்த தேர்தல் தொகுதி சார்பாக போட்டியிட்டு அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக மக்களால் தெரிவு செய்யப்பட்டவர் ஆவார்.
முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி. பண்டாரநாயக்க- சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரது காலத்தில் அரசியலில் தடம் பதித்து அவர் அரசியல் வரலாற்றிலும் அம்பாந்தோட்டை மாவட்ட மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்தார்.
இன்று மெதமுலன பிரதேசத்திலுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் பாரம்பரிய வீட்டில் இரவு முழுவதும் விசேட சமய வைபவங்களும் அன்னதானங்களும் நடைபெறவுள்ளன.
அவரது நினைவையொட்டி ஆண்டு தோறும் நடத்தப்படும் ஞாபகார்த்த சொற்பொழிவு இம்மாதம் 25ஆம் திகதி அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
- எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment