இந்தியத் தமிழர்களை விட இலங்கைத் தமிழர்கள் சந்தோசமாக வாழ்கின்றனர்!
-அமைச்சர் பசில் கருத்து
தமிழ் நாட்டில் வாழும் தமிழர்களை விட இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் நிம்மதியாகவும் சந்தேசமாகவும் வாழ்கின்றனர் என பொருளாதார அபிவருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறினார்.
பண்டார நாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தின் விசேட ஊடக மத்திய நிலையத்துக்கு நேற்று 13) வருகை தந்த அமைச்சர் ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றியபோதே இவ்வாறு கூறினார்.
அமைச்சர் தொடர்ந்தும் ருத்து தெரிவிக்கையில்-
இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டில் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமல் இருப்பது குறித்து இந்திய மக்கள்தான் கவலைப்பட வேண்டும். இலங்கை மக்களுக்கு அதனால் எவ்வித கவலையுமில்லை. பாதிப்பும் இல்லை.
தமிழ் நாட்டில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் ஏராளம். உண்ண உணவின்றி மக்கள் வாடுகின்றனர். இவற்றை மறைக்கவே தமிழக முதல்வர் ஜெயலலிதா இலங்கையில் மூக்கை நுழைக்கிறார் என்றும் அமைச்சர் கூறினார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment