செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி பார்வையிட்டார்!
களுத்துறை, நாகொட பிரதேசத்தில் அமைந்துள்ள செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று பார்வையிட்டார்.
அத்துடன் அங்கு பரிசோதனைக்காகவும் பயிற்சி்க்காகவும் தங்கியுள்ள நோயாளர்களுடன் ஜனாதிபதி உரையாடியதோடு அவர்களுக்கு பழங்கள் அன்பளிப்பு செய்தார்.
தேசிய வடிவமைப்பாளரான அருன சமரவிக்ரம இந்த செயற்கை கால் உற்பத்தி நிலையத்தை உருவாக்கி நிருவகித்துவருகிறார்.
அதன் உற்பத்தித் தரத்துக்காக அவருக்கு 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதி விருதும் 2007 ஆம் ஆண்டில் சர்வதேச விருதுகளும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment