பத்துக் கோடி ரூபா செலவில் நான்கு மாடி கட்டம்!
கொழும்பு ஹைரியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலயத்தில் சுமார் பத்துக் கோடி ரூபா செலவில் அமைக்கப்படவுள்ள நான்கு மாடி கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த புதன்கிழமை (29) கல்லூரி அதிபர் ஏ.எல்.எஸ்.நஸீரா ஹஸனார் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டினார்.
மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, சிரேஷ்ட அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் நௌஸர் பௌசி மற்றும் கட்டிடத்திற்கு நிதி வழங்கிய சம் ஜெம் குறூப் கம்பனி தலைவர் பிரபல கொடை வள்ளல் அல்ஹாஜ் இஸட் ஏ.எம்.றிபாய் உட்பட பெருந்திரளானவர்கள் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment