Wednesday, October 30, 2013

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி!

பொதுநலவாய மாநாட்டில் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி!

காங்கிரஸ் உயர் மட்டக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்



நவம்பரில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

நேற்று (30) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி- பிரதமர் மன்மோகன் சிங்- வெளியுறவுத் துறை சல்மான் குர்ஷித் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலர் கொண்ட காங்கிரஸ் உயர் மட்டக் குழு பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வது பற்றி கலந்துரையாடியது.
தீவிர ஆலோசனைக்குப் பிறகு இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் இந்தியப் பிரதமர் மாநாட்டில் பங்கேற்பது உறுதிசெய்யப்பட்டது.

பொதுநலவாய மாநாட்டை பல நாடுகள் தொடர்புடைய சர்வதேச விவகாரமாக அணுகவேண்டும். இதை இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பிரச்னையாக கருதக் கூடாது. சர்வதேச விவகாரங்களில் இந்தியாவுக்கென பிரத்யேக கொள்கை உள்ளது. அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

ஆகவே  மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்பதில் எந்தவித ஆட்சேபமும் இல்லை' என காங்கிரஸ் உயர்நிலைக் குழுவில் முடிவு செய்யப்பட்டதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவிப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-எம்.ஜே.எம். தாஜுதீன்

No comments:

Post a Comment