எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாட்டினுள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீண்டும் தலை தூக்குவதற்கு இடமளிக்கப்போவதில்லை என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்தாவது-
விடுதலைப் புலிகளை மீள் இணைக்கும் செயற்பாடு பதவிய காட்டுப் பகுதியில் இரகசியமாக நடைபெற்றுவந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீள ஒருங்கிணைக்க முற்பட்ட குற்றச்சாட்டின் கீழ் இராணுவத்தினரால் தேடப்பட்டுவந்த கோபி உள்ளிட்ட மூன்று விடுதலைப் புலி இயக்க உறுப்பினர்கள் பதவிய காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாக கிடைத்த இரகசியத் தகவல்களை அடுத்து, பாதுகாப்பு தரப்பினர் அந்த பகுதியை சுற்றி வளைத்தனர்.
அப்போது தப்பி செல்ல முற்பட்ட மூவரும், பாதுகாப்பு தரப்பினரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்னர்.
உயிரிழந்தவர்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
புது வருடப்பிறப்பின்போது நாட்டு மக்கள் அனைவரும் அச்சமின்றி இருப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய மேலும் தெரிவித்தார்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment