ஜனாதிபதிக்கு செங்கம்பள வரவேற்பு!
ஜி77 நாடுகளின் 50ஆவது அரச தலைவர்களது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பொலிவியா சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பொலிவியாவின் விரு விரு சர்வதேச விமான நிலையத்தில் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
பொலிவியா செனட் தலைவர் யூஜின் ரொஜாஸ் ஜனாதிபதியை வரவேற்றார். ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் செங்கம்பள வரவேற்பும் இராணுவ அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் ஒன்றுணைந்து ஜி77 அரச தலைவர்களது மாநாட்டை பொலிவியாவில் நடத்துகின்றன.
இன்றும் நாளையும் இடம்பெறவுள்ள இம்மாநாட்டில்
இந்தியா, சீனா உள்ளிட்ட 133 நாடுகளின் அரச தலைவர்கள் பங்குகொள்கின்றனர்.
இம்மாநாட்டில் நாளை ஜனாதிபதி உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷவுக்கும், ஐக்கிய நாடுகளின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இந்த மாநாட்டில் வைத்து பொலிவியாவின் உயர் அரச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது.
சமாதானத்துக்கும், ஜனநாயகத்துக்கும் வழங்கிய பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment