மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் அமைக்கப்பட்ட திவிநெகும வங்கி நேற்று (13) திறந்துவைக்கப்பட்டது.
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந்த நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், மாவட்ட சமுர்த்தி திணைக்கள உதவி பணிப்பாளர் குணரெட்னம்இமீள்குடியேற்ற பிரதியமைச்சரின் இணைப்புச்செயலாளர் பொன்.ரவீந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
கிராம மட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினையும் வாழ்க்கை தரத்தினையும் உயர்த்தும் வகையில் திவிநெகு திணைக்களம் ஊடாக பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதன் கீழ் திவிநெகும வங்கிகள் ஊடாக இலகுகடன்களை வழங்குவதன் மூலம் வறுமை அற்ற இலங்கையினை கட்டியெழுப்பும் மகிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் குறிக்கோள் அடையப்படும்.
இந்த சமூர்த்தி வங்கி மூலம் கோட்டைக்கல்லாறு, பெரியகல்லாறு, துறைநீலாவனை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த சுமார் 2500 குடும்பங்கள் நன்மையடையவுள்ளதாக களுவாஞ்சிகுடி பிரதேச அபிவிருத்தி குழு தலைவரும் மீள்குடியேற்ற பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் 25 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டின் கீழ் இந்த வங்கி அமைக்கப்பட்டுள்ளது.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment