கண்டி மாவட்ட முஸ்லிம்களுடன் ஜனாதிபதி நட்புறவுச் சந்திப்பு!
கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான நட்புறவுச் சந்திப்பொன்று நேற்று (08) கண்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது.
ஜனாதிபதி மாளிகையில் ஒன்றுகூடிய சுமார் இரண்டாயிரம் முஸ்லிம்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றும்போது சகல இன மக்களுக்கும் சகல சமயங்களுக்கும் அரசாங்கம் பாதுகாப்பு வழங்கும் என்று கூறினார்.
இந்த அரசாங்கத்தை விட்டும் முஸ்லிம்களைத் தூரமாக்குவதற்கு சில சக்திகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் வெற்றிபெறப்போவதில்லை என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பிரதமர் தி.மு. ஜயரட்ன- அமைச்சர்களான ஏ.எச்.எம். பௌசி- நிமல் சிறிபால டி சில்வா- மஹிந்தானந்த அளுத்கமகே- பிரதியமைச்சர் அப்துல் காதர்- பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.(எம்.ரி.-977)
நன்றி
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment