ஒலுவில் துறைமுகத்தை ஜனாதிபதி திறந்துவைத்தார்!
முன்னாள் அமைச்சர் மர்ஹ_ம் எம்.எச்.எம். அஷ்ரஃப்பின் எண்ணத்தில் அடித்தளமிடப்பட்ட ஒலுவில் துறைமுகம் இன்று (01) மாலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
மீன் பிடி மற்றும் வர்த்தகத் துறைமுகமாக இத்துறைமுகப்பணிகள் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
டென்மார்க் அரசின் உதவியுடன் 2008 ஆம் ஆண்டு இத்துறைமுகத்தின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இதற்காக 7000 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதேவேளை- மட்டக்களப்பு வாகரை புதிய பனிச்சங்கேணிப் பாலத்தையும் ஜனாதிபதி இன்று திறந்து வைத்தார்.
மஹிந்த சிந்தனை தூர நோக்கின் அதிவேகப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின்கீழ் ஜப்பான் அரசாங்கத்தின் நன்கொடை உதவியின் கீழ் 1060 மில்லியன் ரூபாய் செலவில் இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்களான பி. தயாரத்ன- ரவூப் ஹக்கீம்- பிரதி அமைச்சர்களான ரோஹித்த குணவர்தன- ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ்- மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் அபேவிக்ரம- கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் - பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் ஆகியோர் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
-எம்.ஜே.எம். தாஜுதீன்
No comments:
Post a Comment